×

சமந்தாவை குறை சொல்வதா? அதிதி ராவ் கோபம்

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ஜானு பெயரில் ரீமேக் ஆனது. விஜய்சேதுபதி வேடத்தை சர்வானந்த், திரிஷா வேடத்தை சமந்தா ஏற்றனர். இப்படம் வெளியாகி எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சர்வானந்த் நடிக்கும் மற்றொரு படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜானு படத்தில் இந்த ஜோடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் புதியஜோடிக்கு பட தரப்பு திட்டமிட்டது.

கதாநாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி தேர்வானார். இதையறிந்து அதிதி அதிர்ச்சி அடைந்தார். அவர் சமந்தாவுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ‘உண்மையிலேயே இதுபற்றி என் கருத்தை வெளிப்படுத்த எண்ணுகிறேன்.

வெற்றி அல்லது தோல்விக்கான பலன் என்பது நடிகர், நடிகைகளைப்போய் சேர்வதில்லை. இதுபோன்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தக்கூடாது. மேலும் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடும்போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என சமந்தாவுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிதி ராவ்.

Tags : Samantha ,Aditi Rao ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி