×

பக்தி சீசன் தொடக்கம்

ஆக்‌ஷன் படம், அடல்ட் படம், பேய் படம் சீசன் ஓய்ந்ததுபோல் தெரிந்தாலும் இன்னமும் அதற்கான மோகம் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் திடீரென்று 70, 80களில் திரையுலக காலத்தை நினைவுபடுத்துவதுபோல் அம்மன் படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியானதும் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். மூக்குத்தி அம்மன் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அதைத் தொடர்ந்து சிறு தெய்வ வழிபாடு, குல தெய்வம் பற்றி முக்கிய அம்சங்களை கொண்ட பக்தி படமாக ‘மாயத்திரை’ உருவாகிறது.

15 வருடங்களுக்கு முன் குஷ்பு நடித்த தாலிபுதுசு படத்தை தயாரித்த வி.சாய்பாபு தயாரிக்கிறார். பாலா, எழில், அகத்தியனிடம் உதவியாளராக பணியாற்றிய சம்பத்குமார் இயக்குகிறார். முருகா படத்தில் நடித்த அசோக்குமார் ஹீரோவாக நடிக்க ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் இளையராஜா.

Tags : season ,
× RELATED அடுத்த கல்வியாண்டுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் தயார்