×

ஹீரோவுக்கு இணையான சம்பளம் கேட்கிறேனா? டாப்ஸி பதில்

தமிழில் கடைசியாக கடந்த வருடம் கேம் ஓவர் படத்தில் டாப்ஸி நடித்தார். இப்போது ஜெயம் ரவி ஜோடியாக ஜனகனமண படத்தில் நடிக்கிறார். அஹமத் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தில் அவர் நடிக்கிறார். இது ரன் லோலா ரன் ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும். தொடர்ந்து இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் கேட்பதாக கூறப்படுகிறது.

இது பற்றி டாப்ஸி கூறியது: ஹீரோவை போலவே ஹீரோயின்களையும் நடத்த வேண்டும் என நான் கேட்கிறேன். அதாவது, மரியாதையாக. எதற்காகவும் மரியாதையை நான் விட்டுத் தர முடியாது. இப்படி சொல்லும்போது, நான் ஹீரோவுக்கு இணையான சம்பளம் கேட்பதாக புரளி கிளப்புகிறார்கள்.

எனது மார்க்கெட் வேல்யூ என்ன என்பது தெரியும். அதற்கேற்ப மட்டும்தான் நான் சம்பளம் கேட்கிறேன். அதே சமயம், படத்தில் நடிக்க எனக்கு இந்த சலுகைகள் வேண்டும் என எப்போதும் கேட்டதில்லை. என்னை பற்றி தவறாக தகவல் பரப்புவோர் பற்றி எனக்கு கவலையில்லை. அதை பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Tags : hero ,
× RELATED ரவுடி சரமாரி வெட்டிக்கொலை