×

தெலுங்கில் அறிமுகமாகும் பிரியா

தமிழில் இந்தியன் 2, குருதி ஆட்டம், பொம்மை, களத்தில் சந்திப்போம், கசடதபற, பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்த மாபியா படம், நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி இயக்கும் படம் அகம் பிரமாஸ்மி. இதில் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மன்ச்சு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளாராம்.

Tags : Priya ,debut ,
× RELATED தெலுங்கு நடிகர்கள் நிவாரண நிதி