இரட்டை வேடத்தில் யோகிபாபு

சித்தார்த் நடிக்கும் ‘தக்கர்’ படத்தில் யோகிபாபுவுக்கு இரட்டை வேடமாம். அப்பா, மகன் என்று டபுள் ஆக்‌ஷனில் காமெடி செய்து பட்டையைக் கிளப்பி இருக்கிறாராம். கார்த்திக் கிரிஷ் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகி.கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவர் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதையாம்.

“ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் நடித்த அதே பிக்கப்பிலேயே ‘தக்கர்’ படத்திலும் காமெடியில் சரவெடி அடித்திருக்கிறேன். நான் ஒப்புக்கொள்ளும் படங்களில் பெரிய படம், சிறிய படம் வேறுபாடு பார்க்காமல் எல்லாருக்குமே ஒரேமாதிரி ஒத்துழைப்பைத் தருவதாலேயே இயக்குநர்கள் என்னை புக் செய்கிறார்கள்” என்று தன்னுடைய சீக்ரட் ஆஃப் சக்சஸை சொல்கிறார் யோகிபாபு.

Related Stories: