சண்டை காட்சியில் சரவணன்

ஆடை நிறுவன அதிபர் லெஜென்ட் சரவணன், ‘அருள்’ திரைப்பட நடிகர் ஆகியிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்குகிறார்கள். இப்படத்திற்காக நடன இயக்குனர் பிருந்தா அமைத்த நடன அசைவுகளுக்கு வெளிநாட்டு மற்றும் நம்மூர் நடன கலைஞர்களுடன் சரவணன் ஆட, பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் ஸ்டன்ட் கலைஞர்களுடன் சரவணன் மோதிய சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டது. அனல் அரசு ஸ்டண்ட் காட்சிகள் அமைத்தார். இப்படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் செய்து வருகிறார். முன்னதாக பொங்கல் தினத்தையொட்டி படக்குழுவினருக்கு  சரவணன் பரிசளித்தார்.

Related Stories: