×

நயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்

சீனியர் ஹீரோயின்கள் நடிப்பு ஒரு பக்கம் பாராட்டப்பெற்றாலும், மறுபக்கம் அவர்களது பாப்புலாரிட்டியும் சம்பளத்தை உயர்த்தி கேட்க வைக்கிறது. நடிப்பு தவிர காதல், மோதல் போன்ற சர்ச்சைகளால் தங்களை பேசப்படும் நடிகையாகவே பொது வெளியில் வைத்திருக்கின்றனர். இந்த டெக்னிக்கை சமீப காலத்தில் நயன்தாரா, கங்கனா ரனாவத் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

கங்கனா ரனாவத் நேரடியாகவே இயக்குனர், தயாரிப்பாளரிடம் அல்லது மாஜி காதலனுடன் கருத்துவேறுபாடை பகிரங்கப்படுத்துகிறார். அதேசமயம் நயன்தாரா அதை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். இளம் ஹீரோக்களுடன் நடிக்க மறுத்துவிடுகிறார் நயன்தாரா. அவர்களுடன் காதல், முத்தக்காட்சியில் நடிப்பதுபோன்றவற்றை இதன்மூலம் தவிர்த்துவிடுகிறார். அந்த படங்களால் ஏற்படும் வருமான இழப்பை சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதன் மூலம் ஈடுகட்டுகிறார்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க பொருத்தமான சீனியர் ஹீரோயினாக நயன்தாராவை இயக்குனர்கள் கருதுகின்றனர். அவரிடம் கால்ஷீட் கேட்டால் 4 கோடி முதல் 5 கோடி சம்பளம் கேட்பதுடன், பட புரமோஷனில் பங்கேற்க மாட்டேன், மற்ற மொழிகளில் படம் வெளியிட்டால் அதற்காக சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், கொடுத்த கால்ஷீட்டை வீணடித்தால் அதை ஈடுகட்ட மீண்டும் கால்ஷீட் கிடையாது போன்று அடுக்கடுக்கான கண்டிஷன் போட்டுவிடுகிறாராம். இதனால் சிரஞ்சீவியுடன் நடித்த சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாராவின் காட்சிகள் குறைக்கப்பட்டது.
 
தர்பார் படத்துக்கு நயன்தாரா 5 கோடி சம்பளம் கேட்டாராம். படத்தில் ரஜினியுடன் 20 நிமிடம் மட்டுமே வருவதுடன் நடிப்பதற்கான பெரிய ஸ்கோப் எதுவும் அவருக்கு இல்லை. ரஜினிதான் சீனுக்கு சீன் நடித்திருந்தார். ஆனால் நயன்தாரா சில காட்சிகளில் ரஜினியுடன் அருகில் நிற்கிறார் அல்லது உட்கார்ந்து பேசுகிறார். நயன்தாராவின் இந்த பார்முலா அவருக்கு கோடிகளில் சம்பளத்தை மிக எளிதாக கொட்டித் தருகிறது. பெரிய பட்ஜெட் படங்களை விட மற்ற ஹீரோக்கள் படங்களில் அல்லது சோலோவாக நடிக்கும் படங்களில்தான் நயன்தாரா மெனக்கெட்டு நடிக்க வேண்டிய காட்சிகள் அமைக்கப்படுகின்றனவாம்.

Tags : Nayanthara ,hero ,
× RELATED தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகைகள், பணம் கொள்ளை