பாலிவுட்டில் தனது நடிப்பாற்றலால் பெயர் போனவர் நவாசுத்தீன் சித்திக். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தியில் பிசியாக நடித்து வரும் அவர், பார்த்திபனின் ஒத்த செருப்பு பட ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் நவாசுத்தீனை அவரது வீட்டில் சந்தித்தார் பார்த்திபன்.