நள்ளிரவு 3 மணிக்கு நாத்தனாரின் மெசேஜ் ஓடி வந்து உதவிய சமந்தா

ஐதராபாத்: கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் சகோதரி ஷீத்தல் நிடிமோரு அவரது சோஷியல் மீடியாவில் சமந்தாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை பதிவிட்டு கூறியிருப்பதாவது:

சமந்தாவின் திருமணம் நடந்த சில நாட்களில் ஐதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நான் தங்கினேன். ஒரு நாள் இரவு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குளிராக இருந்தது, வாந்தி எடுத்தேன், தலை ரொம்ப வலித்தது. படுக்கையில் இருந்து எழுந்து மருந்து, போர்வையை கூட என்னால் எடுக்க முடியாத நிலையில் இருந்தேன். வேறு வழியில்லாமல் எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல் தெரிவித்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் சமந்தாவிடம் இருந்து ‘நான் வருகிறேன்’ என்ற பதில் வந்தது. அவர் யாரையும் எழுப்பாமல், என் சகோதரரை அனுப்பிவிடாமல் அவரே வந்து எனக்கு உதவினார். போர்வைகளை கண்டுபிடிக்க முடியாததால் பெரிய, பெரிய துண்டுகளை எடுத்து வந்து என் மீது போர்த்திவிட்டார்.

அவரே மருந்து கொண்டு வந்து கொடுத்து அன்று இரவு முழுவும் தூங்காமல் என்னை கவனித்து கொண்டார். மறுநாள் காலை நான் சமந்தாவின் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கு அவர் சேலையில் சண்டை காட்சிகளில் நடித்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் சிரிப்பு, வேலையில் கவனம். ஏதோ முழு இரவும் நன்றாக தூங்கியது போல் வேலை பார்த்தார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* சமந்தா கர்ப்பமா?
சமீபத்தில் ‘எங்கள் தங்கம்’ படத்தின் வெற்றியையும், வசூலையும் கொண்டாடும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் கணவர் ராஜ் நிடிமோருவுடன் கலந்துகொண்டார் சமந்தா. அதில் சமந்தாவின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகளை பகிர்ந்து அத்தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை சமந்தா தரப்பில் இருந்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: