இந்திய ஹாக்கியில் ஓரங்கட்டப்படும் ராணி?

சண்டிகர்: டோக்கியோ  ஒலம்பிக் போட்டியில் ராணி ராம்பால் (27) தலைமையிலான மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வெல்லாவிட்டாலும், துடிப்பான ஆட்டத்தின் மூலம் விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான ராணி, அதன் பிறகு காயம் காரணமாக  சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு  பதில்  கோல் கீப்பர் சவீதா புனியா தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக்  உள்ளிட்ட சர்வதேச ஆட்டங்ளுக்கும் அவரே கேப்டனாக தொடர்ந்தார். இதற்கிடையே,  காயத்தில் இருந்து மீண்ட ராணி மீண்டும் பயிற்சியை தொடங்கினார். முழு உடல்தகுதியை நிரூபித்து,  தனது மாநில அணியான அரியானா கேப்டனாகவும் களமிறங்கினார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த கேலோ இந்தியா தேசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கியில் அரியானா தங்கம் வெல்லவும் காரணமாக இருந்தார். இந்நிலையில், அடுத்த  மாதம்  ஸ்பெயினில் நடக்க உள்ள நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சவீதா கேப்டனாக தொடரும் நிலையில், அணியில் ஒருவராகக் கூட ராணிக்கு இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டதுடன், ஆட்டத்திறனை நிரூபித்த பிறகும்  ராணியை தேர்வு செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது….

The post இந்திய ஹாக்கியில் ஓரங்கட்டப்படும் ராணி? appeared first on Dinakaran.

Related Stories: