×

பக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா

தமிழில் பக்தி படத்தில் நடிப்பதால் விரதம் கடைப்பிடிக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். புராண படம் என்பதால் அதில் நடிக்கும்போது நயன்தாரா விரதம் இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் எப்போதெல்லாம் பங்கேற்கிறாரோ அந்த நாட்களில் அவர் விரதம் இருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அதே பாணியை அவர் பின்பற்றுகிறார்.

தமிழில் ஆர்ஜே. பாலாஜி நடித்து இயக்கும் படம் மூக்குத்தி அம்மன். இது பக்தி படமாக உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இதையொட்டி அவர் விரதம் இருக்க முடிவு செய்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மூக்குத்தி அம்மன் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். இதையொட்டி அவர் விரதம் துவக்கியுள்ளார்.

Tags : Nayanthara ,
× RELATED வேலுநாச்சியார் ஆகிறார் நயன்தாரா