கன்னடத்தில் அறிமுகமாகிறார் காஜல்

இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் நடித்துள்ள காஜல் அகர்வால், முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘2014ல் சினிமாவில் நடிக்க வந்தேன். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன் என்றாலும், கன்னடத்தில் இதுவரை நடித்ததில்லை.

தற்போது கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் கப்சா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். இது 7 மொழிகளில் உருவாகிறது. நான் திரையுலகை விட்டு விலகுவதற்குள் 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பதே லட்சியம்’ என்றார்.

Related Stories: