கல்யாணந்தா கட்டிக்கிட்டு... 3 நடிகைகள் லக லக...

சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த இந்துஜா ஏற்கனவே மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இணைய தள பக்கத்திலும் இவர் பரபரப்பாக இருப்பவர். சமீபத்தில் தனது புதிய போட்டோ ஷூட் படங்களை நெட்டில் வெளியிட் டார். அவரது அழகில் ரசிகர்கள் சொக்கிப்போனது ஒருபக்கமிருக்க நடிகை மகிமா நம்பியாரும் சொக்கிப்போய்விட்டார்.

Advertising
Advertising

ஆசை தாங்காமல், ‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என இணைய தளம் மூலம் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு பதில் அளித்த இந்துஜா, ‘திருமணம் செய்ய நான் ரெடி’ எனச் சொல்லி அவரை உசுப்பிவிட்டார்.

இவர்களின் அக்கபோரே லகலக ரேஞ்சுக்கு பேசப்பட்டு வரும் நிலையில் குறுக்கே புகுந்த நடிகை அதுல்யாவும், இந்துஜாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார். மூன்று நடிகைகளின் சேட்டையை கண்ட சில ரசிகர்கள்,  ‘நீங்களே மாறி மாறி கல்யாணம் பண்ணிட்டா ஆம்பளங்க கதி என்ன ஆவது’ என்று கலாய்த்திருக்கின்றனர்.

Related Stories: