சிபிராஜின் கபடதாரி

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ் மற்றும்  எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்துக்கு கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. கபடதாரி என்றால் பாசாங்குக்காரன் அல்லது வேஷக்காரன் என்று  பொருள்.  சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். மற்றும் நாசர்,  ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ் குமார், மயில்சாமி நடிக்கின்றனர்.

தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கின்றனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். ஹேமந்த் ராவ்  எழுதிய கதைக்கு ஜான் மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சைமன் கே கிங் இசை. வரும் நவம்பர் 1ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படம் வெளியாகிறது.

Related Stories: