ஹாலிவுட் ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்தது. ஆனாலும் ரஜினிகாந்த் பிளட்ஸ்டோன் படம் மூலம் ஹாலிவுட் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு, தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ். பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். நேரம் கிடைக்கும்போது தமிழ் படத்தில் நடிக்கிறார். அதேநேரம் ஹாலிவுட் படத்திலும் கால் பதித்திருக்கிறார்.