×

தனுஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகை

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி துரை செந்தில் குமார் இயக்கிவரும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும், ராம்குமார் இயக்க இருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தில் இணைந்ததால் இந்த படத்தின் பேச்சு வார்த்தை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாகப் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா விஜயலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. மேலும் விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED மேகா ஆகாஷுக்கு சல்மான் கான் சிபாரிசு