பிரபாஸின் பாகுபலி, கார்த்தியின் தோழா படங்களில் குத்தாட்டம் போட்டவர் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி. இவர் கனடாவை சேர்ந்தவர். மும்பையில் தங்கி இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்தில் இறங்கி வந்தபோது நோராவை நோக்கி ஒரு ரசிகை செல்பி எடுக்க ஓடி வந்தார். நோராவும் தன்னுடன் ரசிகை செல்பி எடுக்கப்போகிறார் என்று எண்ணி அவருக்கு போஸ் தர தயாரானார்.