ஆர்யாவுக்கு ஜோடியான மகிமா

மௌன குரு படத்தை இயக்கியவர் சாந்தகுமார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு மகாமுனி என தலைப்பிட்டுள்ளனர். இதில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரசியல்வாதியின் மகனாக ஆர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மௌன குரு பாணியில் இதுவும் திரில்லர் கதை படமாக உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஷூட்டிங் துவங்கியது. இப்போது படத்தை சாந்தகுமார் முடித்திருக்கிறார்.

Related Stories: