கலெக்டர் ஆபீஸை கண்காணித்த இயக்குனர்....

சொல்ல வரும் கருத்தை நெத்தியடியாக சொல்லி திணறடிப்பதில் கில்லாடி இயக்குனர் பாலா. சேது தொடங்கி நாச்சியார் வரை அவரது படங்கள் வெவ்வேறு களத்தில் உருவாக்கப்பட்டவை. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பொறுப்பு ஏற்றார். பிரச்னைகள் காரணமாக அப்படம் வெளியாகவில்லை. தற்போது புதிய படத்துக்கு ஆயத்தம் ஆகியிருக்கிறார். இதில் புதிய பிரச்னையை கையி லெடுக்க உள்ளார். ஆர்யா ஹீரோவாக நடிக்க பிந்துமாதவி ஹீரோயினாக நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

ஒரு கதையை படமாக்குவதற்கு முன் அந்த களத்தை தீவிரமாக கண்காணித்து நுணுக்கமான விஷயங்களை கிரகித்து அதை படத்தின் ஹைலைட்டாக வைப்பதில் வல்லவரான பாலா, புதிய படத்தில் சமூக பிரச்னைக்கு முக்கியத்துவம் தருகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று அங்கு மக்கள் என்னென்ன பிரச்னைகளுக்காக மனு கொடுக்கிறார்கள் என்பதை நேரில் கவனித்தாராம். இந்த விஷயங்கள் படத்தில் முக்கிய கருவாக அமையலாம் என்று தெரிகிறது.

× RELATED கிருஷ்ணராயபுரம்...