‘நோ’ சொன்ன ஷ்ரத்தா

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் தயாராக இருக்கும் நிலையில் அவர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் இளம் நடிகை ஒருவர். ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ புதுபடத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்தி நடிகை அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக பிரிட்டிஷ் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் ராம் சரணுக்கு அடிபட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்திலிருந்து விலகினார் டெய்ஸி. அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று பேச்சு வந்தபோது எமி ஜாக்ஸன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த வாய்ப்பு கை நழுவியது. அடுத்து ஷ்ரத்தாகபூரை பட தரப்பு அணுகியது. இவர் ஏற்கனவே பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடிக்கிறார்.

ராஜமவுலி படம் என்பதால் ஷ்ரத்தாவால் பட வாய்ப்பை உடனே மறுக்க முடியவில்லை. ஏற்கனவே நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் கால்ஷீட் தேதியை அட்ஜெஸ்ட் செய்து ராஜமவுலி படத்தில் நடிக்க முயன்றார். அது முடியாததால் ராஜமவுலி படத்துக்கு நோ சொல்லிவிட்டார். எனவே டெய்ஸியின் வாய்ப்பு மீண்டும் வெளிநாட்டு நடிகைக்கு போகுமா? அல்லது நம்மூர் நடிகைக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

× RELATED சபாநாயகர் தனபால் மீது...