ஒண்ணில்ல... ரெண்டு வேணும்.. பேராசை சமந்தா

திருமணம் செய்துகொண்டால் சினிமா மார்க்கெட் விழுந்து விடும் என்ற சென்டிமென்ட் பல காலமாகவே நடிகைகள் மத்தியில் நிலவுகிறது. அதற்கு பயந்து இன்றைக்கும் சில நடிகைகள் 30 வயதை கடந்தும் காதலர்களை காக்க வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களில் வித்தியாசமானவர் சமந்தா. முன்னணி நடிகையாக இருக்கும்போதே நாக சைதன்யாவை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்துக்கு முன்பிருந்ததைவிட இப்போதுதான் நிறைய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. அதுவும் கவர்ச்சி காட்சிகளுக்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும் மறுப்பு சொல்லாமல் நடிக்கிறார்.

கடந்த ஆண்டில் சமந்தா நடிகையர் திலகம் மற்றும் ரங்கஸ்தலம் (தெலுங்கு) படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே தற்போது நேஷனல் அவார்டு போட்டியில் பங்கேற்கிறது. இரண்டு படங்களில் எந்த படத்துக்கு அவார்டு கிடைக்குமென்று சமந்தாவிடம் கேட்டால், ‘ரெண்டு படமுமே சிறந்த படங்கள்தான் எந்த படத்துக்கு அவார்டு கெடச்சாலும் சந்தோஷம்தான். ஏன்?, ஒண்ணில்ல ரெண்டு படத்துக்கும் நேஷனல் அவார்டு கெடச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷம்’ன்னு பேராசையை வெளியிட்டார்.

× RELATED மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை