கூவத்தூரில் யுஎஸ் ரிட்டர்ன்

யுஎஸ், ரஷ்யா, பாங்காக், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுக்கு சென்று நம்மூர் இயக்குனர்கள் படங்களை இயக்கி வரும் நிலையில் அமெரிக்கா சென்று செட்டிலான ஆரோக்யசாமி கிளமென்ட் கூவத்தூர் வந்து முடிவில்லா புன்னகை படம் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கூவத்தூர் வந்து படம் எடுத்திருக்கிறீர்களே இது அரசியல் படமா என்றபோது,’இல்லை இல்லை என பதற்றமானவர்,’சமூக வலைதளங்கள் மூலம் நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளம்  தம்பதிகள் விவகாரத்தும் அதிகரிக்கிறது.

அமெரிக்காவைவிட இந்தியாவில் தான் விவகாரத்து அதிகம். இதை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டி ருக்கிறது. ரக்‌ஷிதா, டிட்டோ, கூல் சுரேஷுடன் நானும் நடிக்கிறேன்.  ஊட்டி, கூவத்தூரில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஏற்கனவே, தினா, குஷி, ஹேராம் படங்களில் நடித்திருக்கும் நான் பின்னர் வேலை காரணமாக யுஎஸ் சென்று செட்டிலானேன். ஆனாலும் தமிழ்படங்களின் மீதான தாகம் என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது’ என்றார் கிளமென்ட்.

× RELATED சிறுபான்மையினர் மீது தாக்குதலா? அமெரிக்கா அறிக்கையை நிராகரித்தது அரசு