மதம் மாறினாரா நயன் காதலர்?

நயன்தாரா பாய்பிரண்ட் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீரென்று மும்பை புறப்பட்டு சென்று அங்கு, தர்பார் படப்பிடிப்பிலிருந்த ரஜினியை சந்தித்தார். இப்படத்தில் நயன்தாரா நடிக்கும் நிலையில் அவரது கால்ஷீட் விஷயமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பட தரப்பினரிடம்  விக்னேஷ் சிவன் பேசியதாக கூறப்படுகிறது. ரஜினியை சந்தித்துவிட்டு நேராக அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார் விக்னேஷ் சிவன்.

இதற்காக இஸ்லாம் முறைப்படி தலையில் தொப்பி அணிந்தார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்த பலரும் விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரா என்று கேட்டு வருகின்றனர்.

× RELATED திருமணத்துக்கு தயாரா - லட்சுமி மேனன்