தமிழகத்தில் 83 தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி, அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர், அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் உட்பட 83 தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (18.10.2022) தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 43-வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்,  ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சுடுதண்ணீர்வாய்க்கால், அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், திருமலைராயர் படித்துறை, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கீழமாசிவீதி அருள்மிகு தேரடி கருப்பண்ண சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், நாங்குநேரி, அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், சிறுமளஞ்சி, அருள்மிகு உலகம்மன் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சூரம்பட்டிவலசு, அருள்மிகு கருவண்ணராயர் திருக்கோயில், சதுமுகை, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர், அருள்மிகு ஏரிக்கரைவிநாயகர் திருக்கோயில், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், உறையூர், அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், கடலூர் மாவட்டம், சாவடி, அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 83 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின்  அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் பொ.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார், முனைவர் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரும், முதுநிலை ஆலோசகருமான கே.முத்துசாமி, ஸ்தபதி முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, இராமமூர்த்தி, தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post தமிழகத்தில் 83 தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: