×

சட்டமும் நீதியும் வெப் தொடர் விமர்சனம் !

 

சென்னை: பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி இருக்கும் வெப் சீரிஸ் “சட்டமும் நீதியும்”. பருத்திவீரன் சரவணன், நம்ரிதா, விஜயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வழக்கறிஞர் சரவணன் வழக்குகள் வாதாடுவதை விட்டுவிட்டு அந்த உலகத்திலேயே புகார் மணி எழுதிக் கொடுப்பது, கையெழுத்து வாங்குவது, சாட்சிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளை செய்து வருகிறார். அந்த நீதிமன்ற வளாகத்தில் ஒரு மனிதர் தீக்குளிக்கிறார். அந்த சம்பவம் சரவணனின் மனதைக் உலுக்குகிறது. ஏன் அவர் தீக்குளிக்கிறார் பின்னணி என்ன என்பது ஒவ்வொரு எபிசோடுகளாக அவிழ்க்கும் சட்ட முடிச்சு.

சரவணனின் எளிமையான, உணர்வான நடிப்பு கதைக்கு பலம். நம்ரிதா, இனியா ராம் மற்றும் மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். சரவணன் தவிர பெரிய நடிகர்கள் இல்லாமலும், மிகக் குறைந்த நாட்களில் இந்த வெப் தொடரை எடுத்துள்ள இயக்குநர் பாலாஜி செல்வராஜ் பாராட்டப்படவேண்டும்.

ஒளிப்பதிவும், இசையும், தொகுப்பும் தொடரை மிகத் தெளிவாக கொண்டு செல்கின்றன. சில இடங்களில் காட்சிகள் சிறிய தவறுகள் இருந்தாலும், மொத்தத்தில் இது ஒரு நல்ல முறையில் சொல்லப்பட்ட கோர்ட் டிராமா. ஜி5 தளத்தில் வெளியாகியிருக்கிறது.

மொத்தத்தில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை வலியுறுத்திய விதத்திலும் சொற்ப பட்ஜெட்டில் 14 நாட்களில் கூட ஒரு வெப்சீரிசையை எடுத்து முடிக்க முடியும் என நிரூபித்த விதத்திலும் சமூகம் மற்றும் திரைத்துறை இரண்டுக்கும் தேவையான தொடராக மாறி இருக்கிறது “சட்டமும் நீதியும்”

Tags : Chennai ,Balaji Selvaraj ,Paruthiveeran Saravanan ,Namritha ,Vijayashree ,Saravanan ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா