23 வருடத்துக்கு பிறகு இணைந்த ஜோடி

1996ல் பிரபு, மதுபாலா ஜோடியாக நடித்த படம், பாஞ்சாலங்குறிச்சி. இப்போது 23 வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் ஜோடியாக நடிக்கும் படம், காலேஜ் குமார். ராகுல் விஜய், பிரியா வட்லாமணி, நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிக்கின்றனர். இசை, காடி கி.கிருபா. திரைக்கதை, வசனம்: ஆர்.கே.வித்யாதரன். கதை, இயக்கம்: ஹரி சந்தோஷ். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

அப்போது பிரபு கூறுகையில், ‘நான் சங்கிலி படத்தில் அறிமுகமாகி, நேற்றுடன் 37 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. காலேஜ் குமார் படம், எனது 225வது படம். பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்கிறது’ என்றார்.

× RELATED டிடிஎட் தேர்வு எழுதியவர்களுக்கு 23ம் தேதி சான்று