தலைகீழ் ஆஷ்னா சவேரி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், பிரம்மா டாட் காம், இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு படங்களில் நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி அடுத்து டைட்டானிக் படத்தில் நடித்து வருகிறார். அடல்ட் படமாக வந்த, ‘இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு’ படத்தில் படுகவர்ச்சியாக நடித்த ஆஷ்னா சவேரி அடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் அப்படம் மூச்சுபேச்சு இல்லாமல் வந்து சென்றதால் ஆஷ்னாவுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. தற்போது தனது பப்ளிசிட்டிக்காக இணைய தளத்தை நம்பி இருக்கிறார். அடிக்கடி குறைந்த ஆடை அணிந்த படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றும் ஆஷ்னா தற்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

Related Stories: