×

ராம் சங்கையா இயக்கத்தில் கவின்

சென்னை, ஜூலை 16: தமிழ் சினிமாவில் இளம் வெற்றி கதாநாயகனாக வலம் வருபவர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ் மேற்கொள்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸின் 18வது படமான இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத் தலைப்பு, இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர், தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். ‘தண்டட்டி’ படத்துக்கு பிறகு ராம் சங்கையா இயக்கும் படம் இது.

Tags : Kavin ,Ram Sangaiah ,Chennai ,Prince Pictures ,S. Lakshman Kumar ,Prince Pictures… ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா