×

இருவரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அது இந்த படத்தில் நடந்தது மிக்க மகிழ்ச்சி: விஜய் சேதுபதி

சென்னை: மலையாளப்படத்தில் ஒரு கெஸ்ட்ரோல் பண்ணினப்ப நித்யாமேனன் அறிமுகம். இருவரும் சேர்ந்து பணியாற்ற நினைத்தோம். அது இந்த படத்தில் நடந்தது மிக்க மகிழ்ச்சி. அவர் நடித்த எந்த கதாபாத்திரத்திலும் அவரைத் தவிர வேறொருவரை கற்பனை செய்துபார்க்கவே முடியாது. சும்மா வந்தோம் நடித்தோம் என இல்லாமல், எல்லாத் தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக் கூடிய கலைஞர் நித்யா என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

 

 

Tags : Vijay Sethupathi ,Chennai ,Panninappa ,Nithya Menen ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா