×

இயக்குனருடன் ஜோடி சேர்ந்த அன்னா பென்

நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் தயாரிப்பில், ‘நாய்சேகர்’ கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். கார்த்திக் நிவாஸ், மகாவீர் அசோக் இணைந்து தயாரிக்கின்றனர். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான ‘நாய்சேகர்’ என்ற படத்தை இயக்கியவரும் மற்றும் ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கீ’ உள்பட பல படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்கள் மற்றும் யூடியூப்புக்கான வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடவில்லை. பிரபல மலையாள நடிகையான அன்னா பென், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

தனது படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், ‘ஃபீல்குட் உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இப்படம் உருவாக பாக்யராஜ் சார் ஒரு காரணகர்த்தா. அவர் இயக்கிய படங்களை போல் இன்றைய காலக்கட்டத்தில் படங்கள் வருவது இல்லையே என்று ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் இருக்கிறது. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் எனது படம் உருவாகிறது. ஜோடிப் பொருத்தம் பற்றி பேசும் கலகலப்பான இப்படம், ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்’ என்றார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்து, இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார். ராம் பாண்டியன் எடிட்டிங் செய்ய, சசிகுமார் அரங்குகள் அமைக்கிறார்.

 

Tags : Anna Benn ,Kishore Rajkumar ,Karthik Nivas ,Mahavir Ashok ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா