×

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு; ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை அர்த்த வசனங்களை ராதாரவி தொடர்ந்து பேசுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ராதாரவி பேச்சால் பெண் நடிகைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார்.

இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும்  நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராதாரவி மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Actor association ,Nayantara ,Radharavi ,
× RELATED ரீரிலீசாகும் காதலுக்கு மரியாதை, வாலி