×

விஜய் சேதுபதி கெட்டப்பை பார்த்து அழுத மகள்

ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும் வில்லன், எதிர்மறை கதாபாத்திரங்கள் வந்தாலும் ஏற்று நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரமாக திருநங்கை வேடம் ஏற்று நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம். அழகான கதை. இப்படத்தில் திருநங்கை வேடம் என்பதால் அதை ஏற்கவில்லை. வேடத்தின் முக்கியத்துவம் கருதியே ஏற்று நடித்தேன்.

திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. திருநங்கை கெட்டப்பில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள். சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.

குற்றவாளி களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக் கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் அதை தெரிவிப்பதற்கு தேர்தல் உள்ளது. இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

Tags : Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்