×

கார்த்தி ஜோடியாக கல்யாணி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் பிரமாண்டமான ஆக்‌ஷன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது. இதற்கு ‘மார்ஷல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’ போன்ற ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படங்களை தொடர்ந்து கார்த்தி மற்றும் ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் ஆகியோரின் மற்றொரு லட்சிய முயற்சியாக இப்படம் உருவாகிறது. இதில் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

மற்றும் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசை அமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய, அருண் வெஞ்சாரமூடு தயாரிப்பு வடிவமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, ஐ.வி.ஒய் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த 1960 காலக்கட்டத்தில் இருந்த ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் அரங்கம் அமைக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.

Tags : Karthi ,Kalyani ,Dream Warrior Pictures ,IVY Entertainment ,Rameswaram ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா