×

உளவியல் கதையில் மிஷா கோஷல்

சேரன், சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜூனன் இணைந்து ‘பேரடாக்ஸ்’ என்ற குறும்படத்தின் டிரைலரை வெளியிட்டனர். தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் எல்.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிப்பில் உளவியல் அடிப்படையில் உருவான இப்படத்தின் தலைப்புக்கு தமிழில் ‘முரண்பாடு’ என்று அர்த்தம். இது மனித உளவியல் சார்ந்த கதைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த குறும்படத்துக்காக சேரன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

25 நிமிடங்கள் ஓடும் இப்படம் குறித்து பேசிய பிரியா கார்த்திகேயன், ‘ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை தொடர்ந்து வரும் ஹீரோ, நாளடைவில் தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். அப்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களே புரிந்துகொள்ளலாம்’ என்றார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்க, ஹரி பிரகாஷ் எடிட்டிங் செய்துள்ளார். ஃபைசல் வி.காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags : Misha Ghoshal ,Cheran ,Sasikumar ,Prasanna ,Ari Arjunan ,L. Karthikeyan ,The Sailorman Pictures ,Priya Karthikeyan ,Dushyant Jayaprakash ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா