×

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்

சென்னை: தனுஷ் – விக்னேஷ் ராஜா இணையும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தை இயக்குகிறார். தனுஷின் 54-வது படமாக உருவாகவுள்ள இப்படத்தில் மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ‘தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை சொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது’ என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Dhanush ,Vignesh Raja ,Chennai ,Isari Ganesh ,Vels Film International ,
× RELATED கணவருடன் ஹனிமூன் சென்ற சமந்தா