யாவரும் நலம் பார்ட் 2

விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்தியில் 13 பி என்ற பெயரில் வெளியானது. ஹாரர் வகை படமான இதில், ஒரு  அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் டிவி பெட்டிக்குள் நுழைந்து மாதவன் வீட்டில் ரகளை செய்வதாகவும் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என அவ்வப்போது ரசிகர்கள் மாதவனிடமும் விக்ரம் குமாரிடமும் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர். இந்நிலையில்,  ‘யாவரும் நலம் படத்தின் 2வது பாகம் உருவாக உள்ளது. சந்தோஷமா ரசிகர்களே’ என  டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

× RELATED இயற்கையை அரவணைத்து சென்றால்...