×

திருமணமே செய்து கொள்ளாமல் 40 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகும் பாவனா

பெங்களூரு: தமிழில் நடிகர் மோகன் இயக்கி நடித்த ‘அன்புள்ள காதலுக்கு’ மற்றும் ‘நட்சத்திர காதல்’, ‘ஆஹா… எத்தனை அழகு!’ ஆகிய படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் பாவனா ராமண்ணா. அவருக்கு 40 வயதாகிறது. திருமணமே செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அது வருமாறு: 40 வயதை நெருங்கியபோது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவு சாதாரணமாக நடக்கவில்லை. செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாத பெண் என்ற ஒரே காரணத்தை சொல்லி அனைவரும் என்னை நிராகரித்தனர். எனது விருப்பத்துக்கு தடை போட்டனர். தற்போது தடைகளை தாண்டி இரட்டை குழந்தைகளுக்கு அம்மா ஆகப்போகிறேன்.

Tags : Bhavana ,Bengaluru ,Bhavana Ramanna ,Mohan ,
× RELATED நீச்சல் உடையில் கலக்கிய மாளவிகா