×

வெப்தொடர் இயக்க தயங்கியது ஏன்? ரேவதி விளக்கம்

சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள வெப்தொடர், ‘குட் ஒய்ஃப்’. இது சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘குட் ஒய்ஃப்’ என்ற ஆங்கில தொடரின் தமிழ் வடிவமாகும். பிரியாமணி, ஆரி, சம்பத் ராஜ், அம்ரிதா சீனிவாசன், மேகா ராஜன், டி.சிவா நடித்துள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு. கே இசை அமைத்துள்ளார். இயக்குனர் ஹலீதா ஷமீம், திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நடிகை ரேவதி இயக்கியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பிரியாமணி பேசுகையில், ‘திரைப்படமோ அல்லது வெப்சீரிஸோ, தேடி வரும் வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள்’ என்றார். ரேவதி பேசும்போது, ‘இதற்கு முன்பு நான் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும், வெப்சீரிஸ் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். காரணம், படம் என்பது 2 மணி நேரத்திற்குள் தொடங்கி முடிந்துவிடும். வெப்சீரிஸ் அப்படி இல்லை. மேலும், நான் ஒரு எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். அதை ஒரு சவாலா எடுத்து இயக்கியுள்ளேன்’ என்றார்.

Tags : Revathi ,Chennai ,Jio Hotstar ,Priyamani ,Aari ,Sampath Raj ,Amritha Srinivasan ,Megha Rajan ,D. Siva ,Siddharth Ramasamy… ,
× RELATED நீச்சல் உடையில் கலக்கிய மாளவிகா