காரைக்குடி : காரைக்குடி அருகே அண்ணன் மகன் பிறந்தநாளுக்கு பட்டாக்கத்தி கொண்டு கேக் வீடியோ வைரலானதால் ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அஜித்குமார் (26). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் உள்ளது. தனது அண்ணன் மகன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் முன்பு பட்டாக்கத்தியுடன் அண்ணன் மகனை மடியில் வைத்துக் கொண்டு குழந்தை கையில் பட்டா கத்தியை கொடுத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியுள்ளார். அதனை வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பட்டாக்கத்தியுடன் குழந்தை இருக்கும் வீடியோ வைராலானது. சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதை குறித்து அறிந்த காரைக்குடி வடக்கு காவல்துறையினர் ரவுடி அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்….
The post பச்சிளம் குழந்தை கையில் பட்டாக்கத்தி : வீடியோ வைரலானதால் ரவுடிக்கு சிறை appeared first on Dinakaran.
