ஆப்பம் திருடிய அழகர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருமாலிருஞ்சோலை உற்சவமூர்த்தி கள்ளழகர் உலா வருகையில், ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், மேளதாளச் சத்தம், ஆர்ப்பாட்டம், சந்தடி ஏதும் இல்லாமல், அவர் வரும் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு ஓட்டமாய் ஓடிச் சிறிது தூரம் சென்று பின்னர்தான் பல்லக்கை நிறுத்துவர். அதன்பின் பழைய ஆரவாரம் தொடரும். இதற்குக் காரணம் என்ன?

முன்னர் வீதியில் ஆப்பம் சுட்டு விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம், கள்ளழகர் ஆப்பம் வாங்கித் தின்றுவிட்டு, காசு கொடுக்காமல் திருட்டுத்தனமாக நழுவிவிட்டாராம். அந்தப் பெண், காசு கொடுக்காமல் சென்ற என்னை (கள்ளழகர்) எங்கே பிடித்துக் கொள்வாளோ என்று ஓடிவிட்டதால், அதே போன்ற நிகழ்வினை இப்போதும் செய்கின்றனர்.

ஆப்பத்தை எடுத்துக் கொண்டு, கள்ளழகர் ஓடி மறைந்து நின்ற திருப்பேர்நகரில், சயனக் கோலத்தில் அப்பக்குடத்தானாக விளங்குவதைக் கண்டுபிடித்து மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார். இதே பக்திப் பரவசத்தில், பெரியாழ்வாரும் திருடிவிட்டு ஓடிப் போன பெருமாளை அடிக்கக் ‘கோல் கொண்டுவா’ என்றும், ‘இங்கே போதராய் வா, வா’, என்றும் மங்களாசாசனம்  செய்தார்.

Related Stories: