எண்ணூரில் பழுதடைந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்: மீனவர்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் வசிக்கும் மீனவர்களின் பல குடிசைகளில் கழிவறை வசதி இல்லை. இதனால், பெண்கள் மற்றும் ஆண்கள் கடலோரத்தில் திறந்தவெளியை கழிப்பிடத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் இவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெட்டுக்குப்பத்தின் பிரதான தெருவில்  மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்தை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் இங்கு செயல்பட்டு வந்த தண்ணீர் மோட்டார் பழுதானது. மின்விளக்குகளும் எரியவில்லை. எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அப்பகுதி உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரிடம் பலமுறை புகார் கொடுத்தனர். அந்த பகுதி வார்டு கவுன்சிலர் சிவக்குமார் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என்று மண்டல குழு கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேறு வழி இல்லாமல் தற்போது கடற்கரையில் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒதுங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் இந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post எண்ணூரில் பழுதடைந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்: மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: