×

ஓம் முருகா: தடைகள் நீங்கி சகல காரிய வெற்றிதரும் வேலன் வழிபாடு..!!

எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், தீர்வு காண வேண்டுமென்றால் அதற்கான ஒரே வழி நம்பிக்கையான இறைவழிபாடு தான். இறைவனை 'முருகன்' வடிவில் உணர்வதே 'கௌமாரம்'. இதனை அடிப்படையாகக் கொண்டு, முருகனை வழிபட்டுவந்தால் இறைவனின் தத்துவம் படிப்படியாக விளங்கும். அந்த இறைவனை தூய்மையான மனதோடு வழிபடுவதன் மூலம், நமக்கு கிடைக்கப்படும் பலனை எவராலும் தடுக்க முடியாது.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு இருக்கும் பணக்கஷ்டத்தோடு சேர்த்து, மன கஷ்டத்தையும் தீர்த்துக்கொள்ள ஒரு சுலபமான முருக வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வறுமையின் பிடியில் உள்ளவர்கள் கஷ்டத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகவும், மன சஞ்சலத்தோடு இருப்பவர்கள், நிறைவான வாழ்க்கையை அடையவும் முருகனை இந்த முறையில் வழிபடுவது மிகவும் சிறந்தது. ஆவணி வெள்ளி ரொம்பவே விசேஷம்.

எனவே, வெள்ளிக்கிழமை நாளில், மாலையில் முருக வழிபாடுகளைச் செய்யுங்கள். முன்னுக்கு வரச் செய்வார் வள்ளிமணாளன். இன்று வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, வெங்கல விளக்கு இப்படி பலவகைப்பட்ட விளக்குகள் வந்திருந்தாலும், இறைவனுக்குரிய விளக்கு என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்தது மண் விளக்குகள் தான். இதற்காக வீட்டில் வெள்ளி விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறவில்லை.

எப்படிப்பட்ட ஆடம்பரமான விளக்குகளை நம் வீட்டில் வைத்திருந்தாலும், பூஜை அறையில் ஒரு மண்ணினால் ஆன அகல் தீபம் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த ஒன்று. கஷ்டங்களை போக்கும் முருகப்பெருமானின் வழிபாட்டினை வீட்டில் முதன்முதலாக தொடங்க வேண்டுமென்றால் புதிய அகல் விளக்கு ஒன்று (வாரம் தோறும் இதே விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்), 2விளக்கு திரி, சுத்தமான பசுநெய், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் ஒன்று.

உங்கள் வீட்டில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படம் இல்லை என்றால் புதியதாக வாங்கிக் கொள்ளவும். வீட்டின் மகிழ்ச்சிக்கு தனி முருகரை விட துணைவியுடன் இருக்கும் முருகப்பெருமானின் படம் மிகவும் சிறந்தது. வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகப்பெருமானுக்குதான். எனவே முருகனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சொந்தவீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார் அழகன் முருகன்.

Tags : Om ,Waylon ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா