ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

திருவனந்தபுரம்: ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி காரணமாக திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய் துதலா  3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 செப். 28ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த ஸ்டேடியத்தின் மின் இணைப்பை கேரள மின்வாரியம் துண்டித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2.5 கோடி கட்டண பாக்கியை செலுத்தாததே இதற்கு காரணமாகும். இதுகுறித்து கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆடுகளத்தை பராமரிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களிடம் உள்ளது. ஸ்டேடியத்தின் மற்ற பொறுப்புகள் முழுவதும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தான் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது.  இந்த விவரம் எங்களுக்கு தெரியாது. ஆனாலும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கேரள அரசிடம் இது தொடர்பாக  தெரிவித்துள்ளோம். தற்போது ஜெனரேட்டர்கள் மூலம் தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

The post ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் மின் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: