அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிட பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண நிதியுதவி, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றை பெற ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிடம் கட்ட வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு ₹13 லட்சம் மதிப்பில் புதிய சேவை மைய கட்டிட பணிகள் துவங்கியது. இந்த பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கு மின் இணைப்புக்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள மின்வயர்கள் அப்படியே கிடக்கிறது. எந்த பணிகளும் நடைபெறவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post அனந்தேரி ஊராட்சியில் சேவை மைய கட்டிட பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: