நாட்டிலேயே மிக சிறந்தது வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2ம் இடம்: டார்ஜிலிங் முதலிடம்

டார்ஜிலிங்:  நாட்டின் சிறந்த உயிரியல் பூங்கா பட்டியலில், வண்டலூர் உயிரியல் பூங்கா 2வது இடத்தை பிடித்துள்ளது. டார்ஜிலிங் உயிரியல் பூங்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் கடந்த 10ம் தேதி உயிரியல் பூங்கா இயக்குனர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்தின் சார்பில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு, இமாலயன் உயிரியல் பூங்கா முதலிடம் பிடித்துள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 2வது இடத்தையும், கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீசமராஜேந்திர உயிரியல் பூங்கா 3வது இடத்தையும் பிடித்துள்ளன. கொல்கத்தாவின் அலிபோர் உயிரியல் பூங்கா சிறந்த பூங்காவிற்கான பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது….

The post நாட்டிலேயே மிக சிறந்தது வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2ம் இடம்: டார்ஜிலிங் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: