அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே தங்கி வேலை செய்வதற்கு விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் சுமார் ரூ.95லட்சம் கட்டணம் வசூலிப்பது குறித்து அதிபர் டிரம்ப் அரசு பரிசீலனை செய்து வருகின்றது.  அமெரிக்காவில் எச்1 பி விசாக்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் அதிபர் டிரம்ப் அரசின் முன்மொழிவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் விதிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சர்வதேச மாணவர்கள் தங்களது எப்1 விசா மூலம் படிப்பை முடித்த பின்னர் தங்களது மாணவர் விசாக்களிலேயே ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கு ஓபிடி திட்டம் அனுமதிக்கின்றது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர், அதாவது ரூ.95லட்சம் கட்டணம் வசூலிப்பது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது. கடந்த 2024ம் ஆண்டு தரவுகளின்படி மொத்தம் 419000 வெளிநாட்டு மாணவர்கள் ஓபிடி திட்டத்தின் கீழ் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

Related Stories: