கோம்பை பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

தேவாரம்: கோம்பை பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைக்குள் மழை தண்ணீர் புகுவதால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே, உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கான்கிரிட் கட்டிடம் கட்டி தரப்பட வேண்டும் என பெற்றோர்கள் விடுத்துள்ளனர். கோம்பை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அதிகமான அளவில் விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்வதால், மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. 8வது வார்டு அரண்மனைத்தெருவில் செயல்படும், இங்கு ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள வகுப்பறை ஒன்றில் கட்டிடத்தின் மேற்பகுதியில் வேயப்பட்ட ஓடுகள் சேதமடைந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறையில் ஒழுகி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அதுபோல், கோடைகாலத்திலும் சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள் வியர்வையில் நனைந்தபடி படிக்கும் அவலநிலையில் உள்ளனர். இதனால் இங்குள்ள ஓடுகளால் வேயப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை மாற்ற வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது: ”ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தொடர்ந்து, பழைய ஓட்டினால் செய்யப்பட்ட கட்டிடம் பழுதாகிவிட்டது. மேற்கூரை வழியே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் எங்களது பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓடு மூலம் வேயப்பட்ட கட்டிடம், மிக பழைய கட்டிடமாக உள்ளது. எனவே உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கான்கிரிட் கட்டிடம் கட்டிதரப்பட வேண்டும், என்றனர்….

The post கோம்பை பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: