பிரதோஷம்

இன்றைய நாள் பிரதோஷ நாள்.  மாதப்பிறப்பும் பிரதோஷமும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் மார்கழி பிரதோஷம் சாலச் சிறந்தது. இந்த பிரதோஷ வேளையில் விரதமிருந்து, மாலை சிவபெருமானை வணங்குவதன் மூலமாக சிறந்த  புண்ணிய பலன்களைப்  பெறலாம். நினைத்ததெல்லாம் நிறைவேறச்  செய்யும் அற்புதமான வழிபாடு பிரதோஷ வழிபாடு. எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தரும் வழிபாடு.  

இது தவிர இன்றைய நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அனங்க திர யோதசி நாள் என்றும் இந்த நாள் சொல்லப்படுகிறது.  அனங்கன் என்றால் அங்கமில்லாதவன்.மன்மதன் என்று பொருள். திருமணத்தடை உள்ளவர்கள், இந்த நாளில் ரதி மன்மதனை வழிபட்டால் திருமணத் தடங்கல்கள் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும்.

Related Stories: