சூரியன் தரும் அரசு பதவி யோகம்

ஒருவர் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் என்பது பத்தாம் இடம். பத்தாம்  இடத்தோடு சூரியன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டால் , அவர் களுக்கு நல்ல ஜீவனம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும். சம்பளம் பென்ஷன் முதலியவை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பாக்கியம் வந்துவிடும்.இதற்கு உதாரணமாக பல ஜாதகங்கள் உண்டு.

ஜாதகம் 1

ஒருநண்பர்.கும்பலக்னம்.பூரட்டாதிஇரண்டாம்பாதம்.கும்பராசி.லக்னத்தில்சந்திரனில்கேது.நான்கில்செவ்வாய்.எட்டில்ராகு.பத்தில்குரு.பதினொன்றில்சனி.12ல்சூரியன்,புதன்.இந்தநண்பர்படிப்படியாகமுன்னேறியவர்.பொறியியல் துறையில் இளநிலை முதுநிலைப் பட்டங்களைப் பெற்று,நிறைவாக  முனைவர் பட்டத்தையும் பெற் றார். பெரும் பதவி வகித்து ஓய்வு பெற்றார். இன்றைய தேதி வரை நல்ல கணிசமான தொகையை அரசாங்க ஓய்வூதியமாகப் பெற்று வருகின்றார்.இதற்குக்  காரணம் சூரியன்.

7ஆம் ஆதி சூரியன் 12ல் மறைந்து விட்டார் என்பதினால்  இவருடைய மண வாழ்க்கையும் கெட்டுவிடவில்லை. அற்புதமாக வாழ்ந்துவருகின்றனர். அதைப்போலவே பன்னிரண்டாம் இடத்தில் சூரியனும் புதனும் ஒரே நட்சத்திரத்தில் இருந்து புதன் அஸ்தங்கம் ஆனாலும்கூட, புதன் திசையில் தான் இளநிலை முதுநிலைப் பட்டங்களையெல்லாம் முடித்தார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே 12 ல் சூரியன் புதன் இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. புதனுக்கு வீடு கொடுத்தவர் லக்னத்துக்கு 11ல் குரு வீட்டில் இருப்பதும், அந்த குரு லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் வீட்டில் இருப்பதும் அருமையான அமைப்பு. தன லாபாதிபதி குருவின் வீட்டில் சனி இருக்கிறார். சனியின் வீட்டில் சூரியன் இருக்கிறார்.

எனவே லக்னாதிபதியான சூரியனோடு லாபாதிபதி மற்றும் 10-க்குடைய குரு தொடர்பு வந்துவிடுகிறது.பத்தாம் வீட்டில் சூரியன் தொடர்பு கொண்டதால் இவர் அரசாங்க ஊதியத்தை  இன்றுவரை பெற்றுவருகின்றார். ஆனால் இங்கே சூரியன் ஒரே ஒரு தீமையை மட்டும் ஜாதகருக்கு செய்திருக்கிறார். அவர் பிதுர் காரகன் என்பதாலும் , லக்னத்திற்கு 12ல்  விரயத்தில் ஏறியதாலும், அதுவும் 9ம் இடத்துக்கு எட்டாம் இடமான சுக்கிரன் லக்னத்தின் ஏறி, நின்றதாலும், இவருடைய தந்தையார் ஆயுள் கெட்டு இளம்  வயதிலேயே காலமாகிவிட்டார். சூரியனுடைய தீமையான பலன்களில் இதுவும் ஒன்று.ஆனால் மற்ற நன்மைகள் அந்த சூரியன் இவருக்கு செய்துவிட்டார். நல்ல ஆத்மபலம் உடையவர் இவர். எனவே பல பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். காரணம் சூரிய பலம்.

 

ஜாதகம் 2

ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்  ஜாதகம். இவரும் 40 ஆண்டுகாலம் பணியிலிருந்து ஓய்வு பெற்று இன்றுவரை ஓய்வூதியம் பெற்றுவருகின்றார். சகல நன்மைகளும் பெற்று வருகிறார். காரணம் சூரியன்.லக்னத்தில் சூரியன் புதன். கும்ப லக்னம். விருச்சிக ராசி. இரண்டில் கேது. 12 ல் சுக்கிரன் செவ்வாய். 11ல் குரு. சனி. எட்டில் ராகு.ஏழுக்குடையவனும் 5க்கு உடையவனும் லக்ன கேந்திரம் ஏறி நின்றதால் சூரியன் இவருக்கும் நல்ல கல்வியையும், ஆத்மா ஆற்றலையும் வாழ்நாள் முழுவதும் தந்திருக்கிறார்.பத்தில் சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பன்னிரண்டாம் இடத்தில் சனியின் வீட்டில் உச்சம் பெற்று அமர, அந்த சனிக்குரிய ராசியில்தான்   சூரியனும் புதனும் இருக்கிறார்கள்.

சனி 3ஆம் பார்வையாக சூரியனையும் புதனையும் பார்க்கிறார். அதாவது தனது சொந்த ராசியைப் பார்க்கிறார். எனவே சந்திரன் நின்ற கேட்டை  நட்சத்திராதிபதி புதன் சூரியனோடு இணைந்ததாலும். அவருக்கு வீடு கொடுத்தவர் சனியாக இருப்பதாலும். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய், சனியின் வீட்டில் இருப்பதாலும். அதே சனியின் இன்னொரு வீட்டில் (கும்பம்) சூரியன் இருப்பதாலும்.பத்தாம் வீட்டுக்கான தொடர்பு சூரியனுக்கு பலமாக வந்துவிடுகிறது.இதுதவிர பத்தாம் வீட்டு ஜீவனாதிபதி செவ்வாய் பன்னிரண்டில் மகரத்தில் உச்சம் பெற்று இருக்கிறார்.

எனவே சூரியன் இவருக்கு நல்ல ஆத்ம பலத்தையும், ஏழாம் அதிபதியாக பலம் பெற்று, தன் ராசியைப் பார்த்து இருப்பதால், நல்ல களத்திரத்தையும், ஐந்தாம் ஆதியோடு இணைந்திருப்பதால் நல்ல குழந்தைகளையும், பத்தாம் வீட்டோடு தொடர்புகொண்டு இருப்பதால் நல்ல உத்தியோகத்தையும், சூரியன் ஏழாம் வீடான  சிம்மத்தை பார்வையிடுவதால் அரசாங்க ஊதியத்தையும் பெற்றுத் தந்திருக்கிறார். இங்கேயும் ஒரே ஒரு துன்பம் உண்டு. சூரியன் அஷ்டமத்தில் நிற்கக்கூடிய ராகுவின் சதயத்தில் இருப்பதாலும், பிதுர் ஸ்தான சுக்கிரன் 12ல், 9க்கு மாரகாதிபதி செவ்வாயோடு அமர்ந்ததாலும், இவருடைய தந்தையாரும் இளமையிலேயே காலமாகிவிட்டார்.மற்றபடி இவருக்கு சூரியன் பலவித நற்பலன்களை வாரி வழங்கியிருக்கிறார்.

ஜாதகம் 3

(இருவரும் அரசுப்  பணி)   இது கன்யா லக்கினம். லக்னத்தில் செவ்வாய் கேது. விருச்சிகத்தில் சந்திரன். மகரத்தில் புதன், சுக்கிரன், சூரியன், குரு. மீனத்தில் ராகு. சிம்மத்தில் சனி. ஐந்தாம் இடத்தில் புதன், சுக்கிரன், சூரியன், குரு. இப்படி நான்கு கிரகங்கள் இருக்கின்றன. லக்னம், பஞ்சம ஸ்தானம் நன்கு வலுவாகவே இருக்கிறது. ஒன்பதாம் அதிபதி சுக்கிரனும் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் இந்த ஜாதகத்தில்  1,5,9 வலுப்பெறுகிறது. ஒன்றாம் இடத்துக்கு உடையவரும், 9ம் இடத்துக்கு உரியவருக்கு  இணைந்து பஞ்சம திரிகோணத்தில் இருப்பது என்பது  மிகப்பெரிய சிறப்பு.

இது மூன்று இடத்தையும் பலப்படுத்துகிறது ஒரு ஜாதகனுடைய 1,5,9 இடங்கள் தொடர்புகொண்டுவிட்டால் அந்த ஜாதக வலிமை நிச்சயமாக நன்றாகவே இருக்கும். இதில் சூரியனும்  லக்னாதிபதியும் பத்தாம் இடத்திற்கு உரிய புதனோடு ஐந்தாமிடத்தில் இணைந்து இருப்பதால், இங்கே 1 +10 + சூரியன் தொடர்பு கிடைத்துவிடுகிறது.ஐந்தாமிடத்து  சனி சிம்மத்தில் இருப்பதால், பரிவர்த்தனை யோகம் பெற்று, சூரியன் பலமடைந்து விடுகின்றார்.

எனவே, இவர் சாதாரண அரசு வேலையில் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அரசாங்கத்தில் கண்காணிப்பு பொறியாளராகப் பதவிபுரிந்து, இன்றுவரை நல்ல குழந்தைச் செல்வங்கள், உடல் ஆரோக் கியம், இல்லறத்துணை, ஓய்வு  ஊதியம் பெற்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

இங்கே இன்னொரு விசேஷமும் பார்க்கவேண்டும். கன்னி லக்னத்துக்கு ஏழாம் இட குரு ஐந்தாம் இடத்தில் தொடர்புகொண்டு, அவரே 7ம் இடத்துக்கு 10ம் இடமான, மனைவியின் ஜீவன ஸ்தான அதிபதி சூரியனோடு இணைவதால், மனைவியும்  மத்திய அரசில் பதவி பெற்று, ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்று வருகின்றார். இப்படி சூரியனின் உன்னதப் பலன்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஜாதகம் 4

மீன லக்னம். லக்னத்தில் குரு. நான்கில் செவ்வாய். ஐந்தில் சூரியன் புதன். 6ல் கேது, சுக்கிரன். ஏழில் சனி. பத்தில் சந்திரன். 12ல் ராகு. இவரும் அரசாங்கத்தில் மருத்துவத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சூரியனும் புதனும் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார்கள். ஐந்தாம் இடத்துக்குரிய சந்திரன் லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தா னத்தில் இருக்கின்றார். அவருடைய கேந்திரத்தில் குரு அமர்ந்திருக்கின்றார்.

சந்திரன் வீட்டில் சூரியன் இருப்பதாலும், சந்திரன் பத்தாம் இடத்தில் அமர்ந்து இருப்பதாலும், பத்தாம் இடத்திற்கும் சூரியனுக்கும் தொடர்பு கிடைத்து விடுகிறது.

சூரியனை, குரு 5-ஆம் பார்வையாக பார்ப்பதாலும், சந்திரன் அமர்ந்த பத்தாம் வீடு குருவின் வீடாக இருப்பதாலும், குருவுக்கும் சூரியனுக்கும் தொடர்பு ஏற்பட்டு விடுகின்றது. எனவே இங்கே 1ம் வீடு, சூரியன், பத்தாம் வீடு பத்தாம் வீட்டிற்குரிய குரு ஆகிய தொடர்புகள் பலப்பட்டுவிட்டது. இவரும் அரசாங்கத்தில் மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, இன்று வரை ஓய்வூதியம் பெற்றுவருகின்றார்.

இந்த சூரியனோடு ஐந்தாமிடத்தில் புதனும் இணைந்து இருப்பதாலும், புதன் 4 7-க்குடையவராக இருப்பதால், ஏழாம் இடமும், பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டுவிடுகிறது. எனவே இவருடைய மனைவியும் இதே சூரிய பலத்தினால் அரசாங்கத்தின் பணிபுரிந்தார்.

எனவே  சூரியன் ஒரு ஜாதகத்தில் பலப்பட்டுவிட்டால், ஏதேனும் ஒரு விதத்தில் தனது ராசியான சிம்ம ராசியோடும் ஜீவன காரகனோடும்  ஜீவன ஸ்தானாதிபதியோடும்  தொடர்புகொண்டுவிட்டால், அவர்கள் அர சாங்க ஊதியம் பெறுவதற்கும், அரசாங்க பதவியைப் பெற்று உயர் வதற்கும், வாய்ப்பு பெற்றவர்கள் ஆகி விடுகின்றார்கள்.

Related Stories: