குரு – மங்கள யோகம்!

யோகங்களில் சில கிரகங்கள் பெரும் பாக்கியங்களை அள்ளித் தருவதாக உள்ளது. அவ்வாறு யோகங்களை பாக்கியங்களை அள்ளித்தரும் கிரக இணைவுகள் ஆச்சர்யமும் அதிசயமும் மிக்கவைதான். அவற்றை எந்த கிரகங்கள் இணைந்து செய்கின்றன என ஆய்வுகளுக்கு உட்படும் பொழுது அந்த இணையும் கிரகங்களுக்கு இடையே உள்ள உறவுகள் நட்பாக இருக்குமேயானால் பலன்களும் சிறப்பாக இருக்கும். அவ்வாறே, இரண்டு கிரகங்கள் இணையும் பொழுது பகை உண்டெனில் பலன்களும் எதிர்மறையாக சிலவற்றை கொடுக்கும் என்பது ஜோதிட விதி. ஜோதிட விதி என்பது பொதுவானதே. கிரகங்கள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துவிட்டு சென்றுவிடும் என்றால் யோகத்தின் அமைப்பாக இருக்கிறது. யோகம் கிரக இணைவுகளின் வெளிப்பாடுதான் நன்மையோ அல்லது தீமையோ இல்லை என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். அவ்வாறேவியாழன்-குரு இணைவைப் பற்றி அறியலாம்.

குரு – மங்கள யோகம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமான வியாழனும் மங்களங்களைத் தரக்கூடிய செவ்வாயும் இணைவது குரு – மங்கள யோகமாகும். இந்த கிரகங்கள் ஒரே ராசிக்கட்டத்தில் இணைந்து இருக்கலாம். கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய 1, 4,7, 10ம் பாவகங்களில் இணைந்திருக்கலாம். திரிகோணங்கள் வழியாகவும் இந்த வியாழன் – செவ்வாய் இணைந்திருக்கலாம். அவ்வாறே, வியாழன்- செவ்வாய் ஆகியகிரகங்கள் பரிவர்த்தனை அடைவதன் மூலம் இந்த யோகம் குரு – மங்கள யோகமாக உள்ளது.

குரு – மங்கள யோகத்தின் சூட்சுமங்கள்…

*வியாழன் கிரகம் உச்சம் பெறும் ராசியில் செவ்வாய் என்ற மங்களன்நீசமடைகிறார். அதேபோல, செவ்வாய் நீசம் பெறும் ராசியில் வியாழன் உச்சம் பெறுகிறார். இவ்வாறு உள்ள கிரக இணைவானது நீச பங்க ராஜ யோகமாக வரும்.
*செவ்வாய் எதிலும் வேகமான கிரகம், வியாழன் எப்பொழுதும் நிதானமாக அறிவு சார்ந்து செயல்படக்கூடிய கிரகம்.
*நமது உடலில் உள்ள ரத்தத்திற்கு காரகமான கிரகம் செவ்வாய்.
* உடலில் உள்ள கொழுப்புகளுக்கு காரணமான கிரகம் வியாழன்.
*செவ்வாய் எரிக்கும் தன்மை கொண்ட வெப்பமான கிரகம். வியாழன்மிதமான வெப்பம் கொண்ட கிரகம் என்றே சொல்லலாம்.
*செவ்வாய் ஒரு ராசிக் கட்டத்திற்குள் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பயணிக்கிறார். வியாழன் ஒரு ராசிக் கட்டத்தில் 365 நாட்கள் வரைபயணம் செய்கிறார்.
*இரண்டு கிரகங்கள் ஒரு வகையில் சுபத்தை தரக்கூடிய கிரகம். ஜாதகரின் வாழ்வில் ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் மற்றும் வாரிசுகள் ஆகியவற்றை கணித்து சொல்லக்கூடிய கிரகம் வியாழன் – செவ்வாய் மட்டும்தான்.

குரு – மங்கள யோகத்தின் பலன்கள்…

*செவ்வாய் – வியாழன் சேர்க்கை உள்ளவர்கள் அதிகாரப் பதவிகளில் இருப்பார். அதிகாரத்தை நோக்கி முன்னெடுத்து வைப்பர்.
*வியாழன் மற்றும் செவ்வாய் இரண்டும் ராஜ கிரகங்கள் என்பதால்அரசியலை நோக்கி பயணிக்க வைக்கும் வாய்ப்பை உண்டாக்கும்.அரசியலில் வெற்றியை பெறுவது பற்றி சிந்திப்பார்கள்.
*அதிகப்படியான நிலபுலன்களை பெற்றவர்களாக இருப்பர். இவர்கள் நிலங்கள் தொடர்பாகவோ அல்லது வீடுகள் வாங்குதல் தொடர்பாகவோ பேச்சுவார்த்தைகள் செய்தால் எளிதாகவும் பிரச்னைகள் இன்றியும் சுமுகமாக முடியும்.
*இவர்களுக்கு மருத்துவர்களுடன் நெருங்கிய நட்பு வட்டங்கள் இருக்கும். மருத்துவம் தொடர்பானபிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகள் உண்டாகும்.
*சுபகாரியங்களை இவர்கள் முன்னெடுத்து அதாவது, தலைமை தாங்கி நடத்தும் பொழுது சிறப்பானமுறையில் நடந்தேறும்.
* எந்த விஷயங்களையும் தீர்க்கமாக மற்றவர்களோடு கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்கும் திறன் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
*சமூகத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், அறிவுரை சொல்லும் ஞானமும் இருப்பதால் அனைவராலும் மதிக்கப்படும் நபராகஇருப்பார்கள்.
*எப்பொழுதும் துறுதுறுவென இருப்பார். அதை பல விஷயங்களை இழுத்து போட்டுக் கொண்டு செய்யும் குணமுடையவர்களாக இருப்பார்.

குரு – மங்கள யோகத்திற்கான பரிகாரம் என்ன செய்யலாம்…
*செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்வது பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உண்டாக்கும்.
* சிலருக்கு கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிநாத சுவாமியை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை களில் வழிபாடு செய்வது சிறந்தநற்பலன்களை உண்டாக்கும்.
*விருதாச்சலம் அருகில் உள்ளவர்கள் லிங்க ரூபமாக உள்ள முருகனை கொளஞ்சியப்பரை செவ்வாய்க் கிழமையும் வியாழக்கிழமையும் வழிபாடு செய்வித்தல் நலம் பயக்கும்.

Related Stories: